எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன்

தேவா பதில் தாருமே

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடிவந்தேன்


1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே

தடை யாவும் அகற்றிடுமே

தயை வேண்டி உம் பாதம் வந்தேன்


2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையை

கேட்டிடக் காத்திருப்பேனே