ஒரு கணம் உந்தன் சந்நிதியில் நான் தவழ்ந்திட வேண்டும் என் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கணம் உந்தன் சந்நிதியில் நான்

தவழ்ந்திட வேண்டும் என் இறைவா

என் மனம் இமய அமைதியிலே

அமர்ந்திட வேண்டும் என் தலைவா


1. தாபோர் மலைமீது நீ செய்த தியானம்

தந்தையும் உன்னையும் ஒன்றித்த தியானம்

மௌனத்தின் மொழியில் நீ செய்த தியானம்

மானிட மாண்புக்கு நீ செய்த தியானம்


2. யோர்தான் நதிக்கரையில் நீ பெற்ற ஸ்நானம்

சோர்வுற்ற மனிதர்க்கு தந்தது ஞானம்

ஆனந்த மழையில் பாடுவேன் கானம்

ஆவியில் என்னைத் தருவேன் தானம்