நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க இறைவன் உன்னைத் தேடுகிறார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க

இறைவன் உன்னைத் தேடுகிறார்

நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க

அவரோ உன் புகழ் பாடுகிறார்


1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்

அழுகுரல் கேட்டு அரவணைப்பார்

நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்

நீதியின் தலைவன் சிரித்திடுவார்


2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே

இனிமை பொழிந்திட வந்திடுவார்

தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்

வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்