உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய் துலங்கிடும் உமக்கே இறைவா நன்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் உமக்கே இறைவா

நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் (2)


1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு

இணையில்லா பலியில் இறைவனை உண்டு (2)

சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ.. 2

நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்


2. உண்மை வழியை உலகுக்குக் காட்ட

உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட (2)

அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ.. 2

அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு