♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நல்லுறவில் இறை சமூகமாவோம் நம் இயேசுவின்
அன்பினிலே இறையாட்சி வளர்ப்போம்
1. அன்புதான் உறவுக்கு அடித்தளம்
உறவுதான் உயிருக்கு அடைக்கலம்
அன்பினிலே உறவு வரும் உறவினிலே நிறைவு வரும்
நிறைவினிலே இறையாட்சி மலரும் - நம்
2. அன்புதான் நீதியின் துவக்கம் நீதிதான் மானிட ஏக்கம்
அன்பினிலே நீதி வரும் நீதியிலே வாழ்வு வரும்
வாழ்வினிலே இறையாட்சி மலரும் - புது
3. ஒற்றுமையே உலகின் தாகம் அன்புதான் அதற்கு பானம்
அன்பிருந்தால் ஒற்றுமை வரும் ஒற்றுமையில் உயர்வு வரும்
உயர்வினிலே இறையாட்சி மலரும் - மனித