கீழ்வானம் சிவக்கும் இயேசுவின் வரவால் தூள்தூளாய் போகும் தீமையின் வடிவம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கீழ்வானம் சிவக்கும் இயேசுவின் வரவால்

தூள்தூளாய் போகும் தீமையின் வடிவம்

வீழாத உம் தலைமை எம் வாழ்நாளில் விளக்கானால்

வாழாத இவ்வுலகம் செங்கதிராய் நிமிர்ந்து நிற்கும்

இயேசு எம் தலைவா நீர் வருக

புது வாழ்வு தரவே வந்திடுக


1. எரிந்திடும் மெழுகாய் தியாகமே செய்தால்

செல்லாத காசாக மதிக்கப் பட்டோம்

புரியாத அன்பை பலியாலே விளக்கி

புரிய வைத்தீரே பணியின் மகிமை


2. பொருளினைச் சேர்க்கும் ஆசைகள் குவிந்து

பொன்னான உறவினை முறிக்கிறது

தலைசாய்க்க இடமே இல்லாமல் வாழ்ந்து

தந்தை அரசின் இல்லம் அமைத்தீர்