உங்களுக்குச் சமாதானம் உலகம் என்றுமே தரமுடியாத சமாதானம் தருகின்றேன் உங்களுக்குச் சமாதானம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உங்களுக்குச் சமாதானம் - 2

உலகம் என்றுமே தரமுடியாத சமாதானம் தருகின்றேன்

உங்களுக்குச் சமாதானம்


1. படைப்பிற்கெல்லாம் சமாதானம்

பகைவர்க்கெல்லாம் சமாதானம் (2)

பரமன் தந்த சமாதானம் நம்மை

பாரில் வாழவைக்கும் சமாதானம் (2)

சமாதானம் நமக்குச் சமாதானம் - 4


2. பிறமத சகோதரர்க்குச் சமாதானம்

பிறமொழி பேசுவோர்க்குச் சமாதானம் (2)

பிற இன நண்பர்க்குச் சமாதானம் நம்மை

பிரிந்து செல்பவர்க்கும் சமாதானம் (2)

சமாதானம் நமக்குச் சமாதானம் - 4