இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே

இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே (2)


1. அன்பினைக் கொண்டு பகைமையை வென்று

பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே (2)

அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு

அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே (2)


2. இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில்

இணைந்திருந்து நாங்கள் செயல்படவே (2)

இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு

இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே (2)