என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது

என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது (2)

என் தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் -2


1. பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன்

பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் (2)

அருளமுதை ஈந்தார்


2. கருணையின் அமுதே பவித்திர அழகே காலமெல்லாம் வருவாய்

பெருமையின் வேந்தே பேரருட்சுடரே

பாசத்தினைப் பொழிவாய் (2) பாசத்தினைப் பொழிவாய்


3. அகிலமும் உமதே ஆற்றலும் உமதே ஆண்டவனே எழுவாய்

இகமதில் இனிமை பொழிந்திடும் இறைவா

இன்புறவே எழுவாய் (2) இன்புறவே எழுவாய்