என் அன்பு தேவா எனைத் தேற்ற வா வா இருள் போக்கி என் வாழ்வை உனதாக்க வா வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் அன்பு தேவா எனைத் தேற்ற வா வா

இருள் போக்கி என் வாழ்வை உனதாக்க வா வா (2)

பாரெங்கும் பகைமை பழிவாங்கும்போது

உன் வார்த்தை எனக்கு ஊன்றுகோலாகும் -2


1. அன்புக்காய் உறவுக்காய் நான் வாழ்கையில்

உன் வார்த்தை ஒன்றாலே நிறைவாகிறேன் (2)

உரிமையின் தேவையை எல்லோரும் உணர்ந்தால்

தொடர்கின்ற துன்பங்கள் பறந்தோடிப்போகும்

மடிகின்ற மனமும் புதுவாழ்வு காணும்


2. மனிதங்கள் மலர்ந்திட வழிபார்க்கிறேன்

உம் பாத நிழல் தன்னில் அதைக் காண்கிறேன்

கரைசேரத் துடிக்கும் இதயங்களெல்லாம் (2)

ஒன்றாக இணைந்தால் அடிமைநிலை சாகும்

நலிந்தவர் வாழ்வும் நிலைவாழ்வு காணும்