இயேசு சுவாமியின் வருகைக்காக எப்போதும் தயாராக இருப்போம்.:

அவரை சந்திக்க நம்மை தகுதி உள்ளவர்களாக எப்போதும் வைத்திருப்போம். ஐந்து விவேகம் உள்ள கன்னியர் போல் நம் விளக்கு அனையாதபடி எண்ணெய் தயாராக தேவையான அளவு எடுத்து வைத்துக்கொள்வோம். சோம்பேரித்தனம், அசமந்தத்தனம், அசால்ட்டுத்தனம் நம்மை மேற்கொள்ளாமல் எப்போதும் சுறு சுறுப்புடனும், விழிப்புடனும் இருப்போம். நம்முடைய ஆன்மா எப்போதும் பிரகாசமாக எரியும் விளக்குபோல் ஒளியுடன் இருக்குமாறு வைப்போம்.

நம் ஆன்ம விளக்கு கரிச்சட்டி போல் இருந்தாலும் நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து அவ்விளக்கை நன்றாக தேய்த்துக் கழுவி சுத்தமான பின் எண்ணெய் ஊற்றி திரி ஏற்றி ஒளிரும் விளக்காக வைத்திருப்போம்..

குறிப்பாக நம் பரிசுத்த சேசு சுவாமி ஒரு நாளில் 24 மணி நேரத்தில் எப்போது வந்தாலும் அவரை எதிர்கொள்ள தகுதியாவர்களாகவும், அவரையே நம்மை தகுதியுள்ளவர்களாக்கும் வரத்தை அவரிடம் கேட்போம்.

ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள் :

"விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.

திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?

இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்." மத்தேயு 24 : 42-44

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !