அமைதியின் தூதனாய் என்னையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2

அன்பனே இறைவனே என்னிலே வாருமே

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே


1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2

வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்

கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்


2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2

இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்

துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்


3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2

கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்

தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்