தாயான தெய்வமே துணையான செல்வமே தேன்தமிழில் கவிபுனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாயான தெய்வமே துணையான செல்வமே

தேன்தமிழில் கவிபுனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் (2)

தாயான தெய்வமே


1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாச மழை பொழிந்தாய்

கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் (2)

கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்

கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன்


2. தஞ்சம் என்று உன்னையே செந்தமிழில் பாடினேன்

பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் (2)

உன் வழியில் உண்மையாய் நாளும் நடந்திட

உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய்