கண்ணாறக் கண்டேனையா உம் அருள்தனை கண்ணாறக் கண்டேனையா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கண்ணாறக் கண்டேனையா உம் அருள்தனை

கண்ணாறக் கண்டேனையா (2)

குறையென்று வருந்திட என் வாழ்வில் ஏதுமில்லை

மறைகளின் தலைவா நன்றி நன்றி


1. வறுமையிலும் செம்மை நெறிகளைத் தந்தாய்

வாஞ்சை நிரம்பிய இதயம் தந்தாய் (2)

பணத்தால் பொருளால் செழித்திடவில்லை

பணிவால் பண்பால் இறைவா உயர்ந்தேன் -2 - குறையென்று


2. அறிவால் உலகம் உயர்ந்திடச் செய்தாய்

அகவொளி ஏற்றி அருள் நலம் தந்தாய் (2)

கெடுமதி கொண்டோர் பலர் இருந்தாலும்

நல்லோர்களும் நண்பர்களும் இங்கு குறைவில்லை -2