அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே அர்ப்பணித்தேன் என்னை அருளினிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே

அர்ப்பணித்தேன் என்னை அருளினிலே (2)

ஏற்றிடுவாய் என் இயல்பினிலே மாற்றிடுவாய் உன் உறவினிலே


1. தாய் தந்தை அன்பு உயர்வானது - உந்தன்

பேரன்பு அதனிலும் மேலானது (2)

பொறிகளில் வார்த்திட இயலாதது - எந்தன்

விழிகளில் கவலை ஏன் துளிர்க்கின்றது - 2


2. எத்தனை ஆயிரம் நன்மைகளால் - ஐயா

ஏழை என் வாழ்வினை அலங்கரித்தாய் (2)

என்னுடல் பொருள் ஆவி உவந்தளித்தே - எந்தன்

இன்னுயிர் உள்ளவரே உமைப் புகழ்வேன் - 2