நிம்மதியாய் வாழ்ந்திடவே நெஞ்சம் ஏங்குதே அம்மையப்பன் திருப்பதமே தஞ்சமாகுதே தடைகள் ஆயிரம் மடைகள் போடுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நிம்மதியாய் வாழ்ந்திடவே நெஞ்சம் ஏங்குதே

அம்மையப்பன் திருப்பதமே தஞ்சமாகுதே

தடைகள் ஆயிரம் மடைகள் போடுதே

தாண்டி வருவதும் கடினமாகுதே

வல்லமை தாரும் நல்ல தேவனே

வல்ல செயல்களால் உலகை வெல்லவே

நீ மட்டுமே எனக்கு நிம்மதி (இறைவா) 2

நிம்மதி -3 இறைவா உந்தன் சன்னிதியே நிம்மதி


1. ஆண்டவன் கட்டளைக்குப் பணிய மறுத்ததால்

ஆதாம் ஏவாளும் நிம்மதி இழந்தார்

ஆபேலின் காணிக்கையைக் கடவுள் ஏற்றதால்

சோதரன் காயினும் நிம்மதி இழந்தான்

சுயநலத்தில் வாழும்போது நிம்மதி பறக்கும்

பொதுநலத்தில் வாழ்ந்துவிட்டால் நிம்மதி பிறக்கும்

இறுதிவரை உறுதியாக பிறருக்காகத் தன்னைத் தந்த - நீ மட்டுமே


2. ஆடையின் விளிம்பைத்தொட்ட பாடுள்ள பெண்ணும்

உடனே குணமடைந்து நிம்மதியடைந்தார்

இருந்ததும் தந்துவிட்ட ஏழை விதவையும்

இறைவனை நம்பியதால் நிம்மதியடைந்தார்

நம்பிக்கையில் வாழ்ந்துவிட்டால் நிம்மதி கிடைக்கும்

நம்பிக்கை தாழ்ந்துவிட்டால் நிம்மதி பறக்கும்

இறுதிவரை உறுதியாகத் தந்தையையே நம்பி வாழ்ந்த - நீ மட்டுமே