இருளகற்றும் ஒளிச்சுடராய் வருவாய் என் இகமதிலே மருளகற்றும் அருமருந்தை தருவாய் என் அகமதிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪


இருளகற்றும் ஒளிச்சுடராய் வருவாய் என் இகமதிலே

மருளகற்றும் அருமருந்தை தருவாய் என் அகமதிலே (2)


1. உடல் நலிந்து நலம் குறைந்து திடம் இழந்து தவிப்பவர்க்கும்

தடம் புரண்டு திசை விலகி பழமையிலே உழல்பவர்க்கும்

வளமுடன் நலமும் உளமதில் திடமும் -2

மனமுவந்தே நீ வரமருள்வாய்


2. பிரிவினைகள் நிதம் வளர்த்து விரிவடையும் மனங்களிலே

பரிவிரக்கம் பிறநலன்கள் சரிந்துவரும் இத்தரணியிலே

சமத்துவ உணர்வை வளர்க்கும் இவ்விருந்தை 2

தினம் எனக்கருளும் பரம்பொருளே