சமபந்தி விருந்தின் சங்கமமே இது இறைமகன் இயேசுவின் திருவுளமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சமபந்தி விருந்தின் சங்கமமே - இது

இறைமகன் இயேசுவின் திருவுளமே (2)

இதை எந்தன் நினைவாய் செய்யுங்கள் என்ற

இறைவாக்கு நிறைவேறும் பலிப்பீடமே (2)


1. அன்பின் சின்னம் சமபந்தி நட்பின் இலக்கணம் சமபந்தி

உறவின் பாலம் சமபந்தி இந்த உன்னத வாழ்வே சமபந்தி

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்

நம்மை இணைத்திடும் சமபந்தி

இது இயேசு வழங்கிடும் திருப்பந்தி - 2


2. மன்னிப்பு தந்திடும் சமபந்தி

மாண்பினைப் போற்றிடும் சமபந்தி

பணிவிடை புரிந்திடும் சமபந்தி நம்மில்

புனிதமாய் மலந்திடும் சமபந்தி - ஒரே உள்ளமும் ... ...