இறைவா உன் பீடம் வந்தேன் என்னில்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா உன் பீடம் வந்தேன் என்னில்

நிறைவாய் உம் அருளைக் கண்டேன்

மறைபோற்றும் இறைவா உன் உரை கேட்கவே இன்று

இறைவா உன் பீடம் வந்தேன்


1. நிலவினில் ஒளியினைப் போல் நெஞ்சம் உன்

நினைவினிலே அதன் உயிர் தஞ்சம் (2)

நீர் எந்தன் உயிராய் நினைவென்ற மலராய்

நீங்காமல் என்னை நிதம் வைத்துக் காப்பாய் (2)


2. வானத்தில் பறந்திடும் பறவையினம் போல்

வாழ்க்கையில் கவலைகள் எனக்கில்லை (2)

வாழ்கின்றேன் உந்தன் வாழ்வைப் பின்தொடர்ந்து

வாழ்கின்ற எனக்கு வழியாய் நீ இருப்பாய் (2)