இறைவனோடு உறவு கொள்ளும் நேரமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனோடு உறவு கொள்ளும் நேரமே

இணைந்து நாமும் பலிசெலுத்த வாருமே (2)

பாவிகளைத் தேடி வந்த ஆண்டவர் - 2

பாதம் கழுவிப் பணிகள் செய்ய அழைக்கும் பலியிது


1. உலக மாந்தர் புரியும் பாவச் சுமையெல்லாம்

ஒருங்கே தோளில் சுமந்து சென்ற மீட்பரே (2)

விலையில்லாத தமது செந்நீர் சிந்தியே

விருப்பமோடு நிறைவு செய்த பலியிது

வாருங்கள் வாருங்கள் புகழ்ந்து பாடுங்கள்

மீட்பராம் கிறிஸ்துவின் அருளை நாடுங்கள் (2)

வாழ்வையே புனிதமாய் மாற்றி மகிழுங்கள் - 2


2. முடிவில்லாமல் அன்பு செய்த தேவனை

முழுமையாக நமக்குத் தந்த பலியிது (2)

பழுதில்லாது பங்குகொள்ள முயலுவோம்

பாவம் நீங்கித் தூய்மையடைய வேண்டுவோம் - வாருங்கள் ...