ஒரு கணம் உனது திருவடி அமர்ந்து இருவிழி மூடினேன் இறைவா ஒருமுறை உனது திருமுகத் தரிசனம் உள்மனம் தேடினேன் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கணம் உனது திருவடி அமர்ந்து

இருவிழி மூடினேன் இறைவா

ஒருமுறை உனது திருமுகத் தரிசனம்

உள்மனம் தேடினேன் இறைவா

நிலவினை எடுத்து என் மனவானில்

இருளினைத் துடைத்திடு இறைவா

அருள் மழைப் பொழிந்து அகமன அழுக்கை

கழுவிட அமர்ந்தியே இறைவா

இறைவா இறைவா இறைவா இறைவா - 2


1. உதயம் விதையே பூவாகும் அன்பில்

சிதையும் மனிதமே உயிர்ப்பாகும்

தோழமை என்பது கிழக்காகும் அதில்

தொழுகைகள் ஒளியதன் தொகுப்பாகும்

நானே எனக்கொரு தவமாகும் தினம்

வீழ்வதும் எழுவதும் இயல்பாகும்

நன்மைகள் செய்வதில் நதியாக நான்

அன்புக்காய் எரிவதில் திரியாக

இதுவே இனி என் செபமாகும் - உன்

திருவுளம் கனிந்தால் சுகமாகும் - 2


2. இடர்களில் விழுந்த இருவிழிகள் தினம்

பெருநதி ஆகும் ஒருவேளை

தியாகத்தில் உதிரும் குருதிகள் யாவும்

விருதுகள் ஆகும் ஒருநாளில்

கண்களை மூடிடும் வேளையிலே நான்

களிப்பது தேவனின் சோலையிலே

காலடி அமர்ந்திடும் ஒருகணமே நான்

தாய்மடி அமர்ந்திடும் புதுசுகமே

பூவாய் உதிர்ந்திடும் நிலவாழ்வு உன்

பூவடி விழுந்தால் நிறைவாழ்வு - 2