என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே நான் உருவாகுமுன்னே என்னை அறிந்திருந்த தெய்வமே நான் வெளிப்படுமுன்பே எனை அர்ச்சித்த தெய்வமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே

நான் உருவாகுமுன்னே என்னை அறிந்திருந்த தெய்வமே

நான் வெளிப்படுமுன்பே எனை அர்ச்சித்த தெய்வமே

உள்ளங்கையில் பொறித்து வைத்துக் காத்த தெய்வமே

போற்றுகிறேன் புகழுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்


1. புதிய வாழ்வொன்றை எனக்கு நீ தந்தாய்

புனித பாதையையும் எனக்குக் காட்டித் தந்தாய் (2)

புதிய வாழ்வினில் புனிதப் பாதையில் -2

புதிதாய் நான் செல்லும் புனிதப் பயணத்தில்

புலரும் விண்மீனாய் இணைந்து நீ வா

புதிய மனிதனாய் எனை மாற்ற வா - போற்றுகிறேன் ... ...


2. இரவிலும் பகலிலும் இணைந்தே வாழ்கிறேன்

இன்ப துன்பத்தையும் இனிதே பகிர்கிறேன் (2)

இன்றைக்கு இருந்து நாளைக்கு அழியும் -2

இந்த உலகத்தில் படைப்புகள் யாவையும்

இரக்க உணர்வோடு காத்து வருகிறீர்

இகமதில் உமைப்புகழ வாய்ப்பளிக்கின்றீர் - போற்றுகிறேன் ... ...


3. எனது அருகினில் ஆயிரம் விழட்டும்

எனது வலப்புறம் பத்தாயிரம் விழட்டும் (2)

எதுவும் என்னை அணுகவே அணுகா - 2

எனது புகலிடம் கோட்டை அரணும் நீர்

எனவே உம்மை நான் நம்பியுள்ளேன்

எதற்கும் நான் அஞ்சத் தேவையுமில்லை - போற்றுகிறேன் ...