ஒரு தரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு தரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்

இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் (2)

முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர

மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2


1. இருளைப் பிரிந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்

இன்று பிரிந்து திரிந்த காலம் (2)

இனியொரு தரம் இறைவனின் கரம் விலகிடேன் என்ன சுகம்

சொல் மனமே சொல் மனமே


2. உலக வாழ்வில் உறவும் பெரிது விலக்கு இல்லா நியதி

அதை மறுப்போர் இல்லை உறுதி (2)

தினம் அவர் கரம் உறவினில் வரம் சுகமோ என்ன சுகம்

என் மனமே என் மனமே