ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் தலைவா அந்த சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க

வருவாயோ என் தலைவா (2) அந்த

சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா


1. விழிகளை மூடி உனை நினைக்கையிலே

விந்தைகள் நிகழ்வது ஏன் இறைவா (2)

மொழிகளைத் தாண்டி மனம் உறவாட

மகிழ்வினில் திளைப்பதும் ஏன் இறைவா -3 ஆ...


2. சோதர மானிட அழுகுரல் கேட்க

வேள்விகள் நிகழ்வதும் ஏன் இறைவா (2)

வேதனைக் கண்டும் காட்டிடும் மௌனம்

விளங்கவில்லை அது ஏன் இறைவா -3 ஆ...