அன்பின் உறவினைப் பகிர்ந்திடும் நேரம் இறைவன் வரவினால் புதுவாழ்வு மலரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பின் உறவினைப் பகிர்ந்திடும் நேரம்

இறைவன் வரவினால் புதுவாழ்வு மலரும்

கூடி மகிழ்வோம் பாடிப் புகழ்வோம்

மனங்கள் இணைந்து இறையை வாழ்த்துவோம் (2)


1. அருளினை அடைந்திட ஒளியினைப் பரப்பிட

உனதடி நான் இன்று பணிந்து நின்றேன்

என் மனம் உந்தன் அன்பில் வாழ்வு காணவே (2)

தாழ்விலும் மனச்சோர்விலும் உன் அன்பினைச் சுவைத்திடுவேன்

பிறர் வாழ்வில் ஒளியேற்ற உன்னருள் வேண்டுகிறேன்

வந்தால் உன்னிடமே என் மனம் பொங்கிடுமே

உறவுகள் வளர்ந்திட இதயங்கள் இணைந்திட

இன்றுனை நாடி வந்தேன்


2. துயரினைக் களைந்திட வழியினை வகுத்திட

உயிரே அருளே நாடி வந்தேன்

என் மனம் விடிவெள்ளி ஒன்றை நாளும் நாடுதே (2)

வாழ்விலும் மறுவாழ்விலும் உன் இன்முகம் கண்டிடுவேன்

புதுநாளில் புதுவாழ்வு இன்றே தொடங்கிடுவேன்

வந்தால் உன்னிடமே ... ...