அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே

ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் (2)


1. அகமென்னும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் - 2

அன்பென்னும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்


2. வாழ்வென்னும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் - 2

தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்