என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீர்தானே ஐயா எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீர்தானே ஐயா

எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா (2)


1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதியென்ன

எல்லாமே எனக்கு நீ இனியும் குறை என்ன

கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே

காலைநேர தென்றலாக கதியோடு என்னுள் வாருமே


2. மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக

எனக்குள்ளே புதிராக இருக்கும் வல்லவரே

நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை

எனக்குத் துணையாய் நீயிருக்க

என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்