உள்ளம் மகிழ்கின்றோம் உவந்து தருகின்றோம் எங்கள் காணிக்கை ஏற்க விழைகின்றோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உள்ளம் மகிழ்கின்றோம் உவந்து தருகின்றோம்

எங்கள் காணிக்கை ஏற்க விழைகின்றோம் (2)

இறைவனே உம்மையே பணிகின்றோம் புகழ்கின்றோம் -2

இனிதாகிடும் அருள்யாவுமே வரமாகிட வேண்டுகின்றோம்


1. உம்மையன்றி எமக்கு என்றும் மீட்பு இல்லையே

உறவுகொண்டு உம்மில் வாழ வழியுமில்லையே (2)

இறைவனே உமக்கென்றே படைப்பெல்லாம் படைக்கின்றோம் -2

வாழ்வுமாக வளமுமாக பலியுமாக வேண்டுகின்றோம்


2. அன்பு என்னும் உலகம் இன்னும் ஆகவில்லையே

அன்பு முழுதும் அணிந்த உள்ளம் காண்பதில்லையே (2)

அன்பெல்லாம் நீரென்றே நம்பினோம் வாழ்கின்றோம் -2

ஆளும் தேவன் தாழில் வைத்து பலியை ஏற்க வேண்டுகின்றோம்