என் இயேசு என்னைக் கேட்கிறார் நீ என்ன தருவாயோ என்று என் கரங்களை ஏந்திச் செல்வேன் என் வாழ்வினை அவரில் தந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இயேசு என்னைக் கேட்கிறார் நீ

என்ன தருவாயோ என்று

என் கரங்களை ஏந்திச் செல்வேன்

என் வாழ்வினை அவரில் தந்தேன்


1. பொன் பொருளும் எனக்கு இல்லை

உன் அருட்பாதம் பணிந்து வழங்க (2)

என் ஆன்ம கதவைத் திறந்தேன்

என் வாழ்வை முழுதும் தந்தேன்

நிலையாக என்னைத் தந்தேன்


2. மணம் கமழும் மலர்களானேன்

உன் திருக்கோயில் தீபமானேன் (2)

அன்பென்னும் பாதை அறிந்தேன்

அருள் வாழ்வின் மகிழ்வை உணர்ந்தேன்

திருவாழ்வில் என்றும் மகிழ்வேன்