நெஞ்சத்தில் வா என் தெய்வமே நீயாக நான் மாறவே உன்னை நான் கண்டு உன் பாதை சென்று நீயாக நான் வாழவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சத்தில் வா என் தெய்வமே நீயாக நான் மாறவே

உன்னை நான் கண்டு உன் பாதை சென்று

நீயாக நான் வாழவே (2)


1. என்னுள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்

என் கண்கள் புதுப்பார்வை காணும் (2)

என்னில் நீ ஒன்றான நிலையான உறவில்

புதுவாழ்வு எனை வந்து சூழும்

எனில் வாழ்வது இனி நீயல்லவா - 2

உன் வாழ்வு எந்தன் வழியல்லவா


2. உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை

ஒருபோதும் தவறாவதில்லை (2)

என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்

எனைக்கண்டு நான் அஞ்சவில்லை

என் நெஞ்சமே இனி உன் இல்லமே -2

என்னோடு நிதம் வாழ வா தெய்வமே