ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஈரில்லா நாதனே எம்மில் நீவிரெழுந்தருளும்


ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வாரும்

ஈரில்லா நாதனே எம்மில் நீவிரெழுந்தருளும்


1. தற்பரன்நும் வரப்ரசாதம் தந்திட வாரும் தாதர் யாம்

துற்பலத்தாற் றீங்கில் வீழாமல் துணைதந்தே காப்பாற்ற வாரும்

வாரும் திவ்யாக்னி நாவே வாரும் எம் வேதாவே


2. வேதத்தி லெம்மைத் திடப்படுத்தும் யாம்

விண் மார்க்கமா வுயிர் வரையுமே

கோதின்றியிங் கொழுகியுய வுந்தங்

கொடைக ளேழையுந் தந்தருளும்


3. மண் மெய் வெந்தீயில் விழும் குணுங்காற்றும்

மாவினைப் போரில் தமியேம் வெலத்

திண்மை தயை செய்தீந்தருளும் புண்யத்

தினில் யாமோங்கச் செய்யும்