விண்ணகத் தந்தையின் விண்ணக கொடையாய் விளங்கும் தூய ஆவியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்ணகத் தந்தையின் விண்ணக கொடையாய்

விளங்கும் தூய ஆவியே

எங்கள் எண்ணமும் செயலும் உயர் அரும்

கொடைகள் ஏழுடன் எம்முள் எழுந்தருள்வீர்


1. அன்றொரு நாளில் அனற்பிழம்பாக

அப்போஸ்தலமே எழுந்தது போல

இன்று எம் நெஞ்சில் வந்தருள்வீரே

இணையில்லா துணையைத் தந்தருள்வீர்


2. பயமுடன் சோர்வும் பிணியும் நீங்க

பனிபோல் அருளை பரிவுடன் பொழிவீர்

அயலவர்க்காக பணி பல ஆற்ற

ஆர்வமும் துணிவும் நல்கிடுவீர்