நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் உனையழைத்தேன் நீ வா வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்

உனையழைத்தேன் நீ வா வா

சிந்தையெல்லாம் நொந்தழுதேன் -2 சொந்தமெல்லாம் நீதானே


1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு

எந்நாளும் நண்பன் நீயே (2)

கண்ணின் மணிபோல காத்திடுவோனே 2

உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்


2. வானின் முழு நிலவே வாழும் உயிர்ச்சுடரே

நீயின்றி வாழ்வேதைய்யா (2)

பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2

உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனைய்யா