♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ -2
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ (2) -2
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே
1. இடையர்க்கு காட்சி தந்தாய் ஞானிகள் வணங்க நின்றாய் -2
குடிலினில் தவழ்ந்து வந்தாய் குவலயம் விளங்கச் செய்தாய் -2
கருணை வடிவே அன்பின் உருவே
கலங்கரை விளக்கே கண்ணின் மணியே - இயேசு பிறந்தார்
2. ஏழ்மையில் பிறந்து வந்தாய் எளிமையை உடுத்தி நின்றாய் (2)
மனதிலே அமைதி தந்தாய் மனிதனாய் வாழச் செய்தாய் (2)
வடிவாய் வரமாய் பிறந்த மகனே
வசந்தம் வழங்கும் செல்ல மகனே - இயேசு பிறந்தார்.. ..