ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும் அருள் தேடும் என் விழிகளுக்கு கருணை மழை வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும்

அருள் தேடும் என் விழிகளுக்கு கருணை மழை வேண்டும் (2)

இயேசுவே வாருமே -2

இயேசுவே எந்தன் நேசரே என்னோடு பேச வாருமே -2


1. ஆயிரம் ஆயிரம் உறவுகளும்

அலைஅலையாய் வரும் நினைவுகளும்

சேய் என்னை தேற்றிடும் நிகழ்வுகளும்

இறைமகன் உந்தன் உயிர்ப்புகளே ஆ (2)

கலங்கரை விளக்கே வா காரிருள் நிலவே வா

கதியென நினைக்கும் அடியவர் மனதில்

அமர்ந்திடவே நீ வா (2)


2. பகிர்வுகள் தருகின்ற நிறைவுகளும்

தியாகத்தினால் வரும் உயர்வுகளும்

அடியவர் பணியில் அகமகிழ்வும்

தலைவா உமது வழியல்லவா ஆ (2)

உனைப்போல் நான் வாழ்வேன் உலகில் இனி உயர்வேன்

உந்தன் அருள் துணை எம்மில் இருக்க

கவலைப் படமாட்டேன் (2)