ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க தருவாயோ என் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க

தருவாயோ என் இறைவா

அந்தச் சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும்

அறியாயோ என் தலைவா- ஒரு நிமிடம்


1. விழிகளை மூடி உனை நினைக்கையிலே

விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா _ 2

மொழியினைத் தாண்டி மனம் உறவாட

மகிழ்வினில் மிதப்பதும் ஏன் இறைவா?

ஏன் இறைவா ஆ..ஆ...ஒரு நிமிடம்


2. அளவில்லாத உன் அன்பினை நினைக்க

அழுகை வருவதன் நியாயமென்ன_2

தொழுதுனை வணங்கி கவலைகள் கூற

கண்ணீர் மறைந்திடும் மாயமென்ன?

மாயமென்ன ஆ...ஆ....ஒரு நிமிடம்


3. சோதரர் மானிடர் அழுகுரல் கேட்க

கேள்விகள் பிறப்பதும் ஏன் இறைவா_2

வேதனை கண்டும் நீர் காத்திடும் மௌனம்

விளங்கவில்லை அது ஏன் இறைவா?

ஏன் இறைவா ஆ...ஆ... ஒரு நிமிடம்