எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லைமிகு இவ்வுலகில் துணை இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே

தொல்லைமிகு இவ்வுலகில் துணை இயேசுவே


1. ஆயனும்ச காயனும் நேயனும்உ பாயனும்

நாயனும்எ னக்கன்பான ஞான மண வாளனும்


2. தந்தை தாய்இ னம்ஜனம் பந்துள்ளோர்சி நேகிதர்

சந்தோட சகல யோக சம்பூரண பாக்யமும்


3. கவலையில் ஆறுதலும் கங்குலில் என் ஜோதியும்

கஷ்ட நோய்ப்ப டுக்கையிலே கைக்கண்ட ஒளஷதமும்


4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடும்கூட் டாளியுமென் தோழனும்


5. அணியும்ஆப ரணமும் ஆஸ்தியும்சம் பாத்யமும்

பிணையாளி யும்மீட்பரு மென்ப்ரிய மத் யஸ்தனும்


6. ஆன ஜீவ அப்பமும் ஆவலும் என் காவலும்

ஞானகீத மும்சதுரும் நாட்டமும்கொண் டாட்டமும்