அன்பென்பது ஒரு இறையியல்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பென்பது ஒரு இறையியல் பண்பு

அதில்தான் உள்ளது மனிதனின் மாண்பு (2)

ஆயிரம் இருந்தும் அன்பில்லையேல் எதுவுமே ஒன்றுமில்லை

இவ்வுலகில் எதுவுமே ஒன்றுமில்லை


1. அதிசயங்கள் பல நிகழ்ந்திடினும்

ஆண்டவனைப் பாடித் துதித்திடினும் (2)

அரவணைப்பு பல கொடுத்திடினும்

அன்பில்லையேல் ஒரு பயனும் இல்லை -2


2. ஆன்றோரைப்போல் என்றும் இருந்திடினும்

சான்றோரைப்போல் என்றும் நடந்திடினும் (2)

அறிவில் சிறந்து விளங்கிடினும்

அன்பில்லையேல் ஒரு பயனும் இல்லை -2