♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நன்றியோடு நெனச்சுப் பார்த்தேன்
நீ செஞ்ச நன்மையைத்தான்
நரம்பாக என் யாழில் நீ இணைஞ்ச செயலைத்தான்
இதயராகம் இனிது பிறக்க
என்னகம் வந்த உன்னை மறவா
நெஞ்சம் நன்றி பொங்க பாடுது
இயேசுவே -2 நன்றி -2 (2)
நன்றி நன்றி நன்றி இயேசுவே உனக்கு
1. நிலையில்லா உலகம் இது நிறைவில்லா இது
வாழ்க்கைநிலைவாழ்வைப் பெற்றுத் தந்தாயே
விலையில்லா மனித வாக்கும் விதியென்று கருதும் போக்கும்
விளைவிக்கும் அழிவைச் சொன்னாயே
இருளே சூழ்ந்த எந்தன் வாழ்வின் ஒளியை ஏற்றிக்
கண்ணீரை நீயே துடைத்தாய்
இயேசுவே -2 வேதனையை நீயே தணித்தாய்
2. மலைகள் தவழும் வாழ்க்கை இங்கே
திசைகள் இருண்ட பாதை இங்கே
அருள் அருவியே என்னை அழைக்கிறார்
ஒலி இழந்த குரல்களாக ஒளி இழந்த விழிகளாகத்
துவழும் மக்கள் வாழ நினைக்கிறார்
துயரம் நீக்கி உந்தன் கருணை எனக்குக் காட்ட
ஓடோடி வந்தாய் நீயே வந்தாய்
இயேசுவே -2 என்னைத் தேடி நீயே வந்தாய்