வர வர திவ்ய நற்கருணையின் மீது, அன்று ஒரு கழுதைக்கு இருந்த விசுவாசம் கூட இன்று கத்தொலிக்கர்களுக்கு இல்லாமல் போய்வருகிறது.

பக்தியில்லாமல் தகுந்த தயாரிப்பின்றி வாங்குவதும், இடது கரங்களில் வாங்குவதும், திவ்ய நற்கருணை வாங்கியபின்பு உடனே சென்றுவிடுவது, பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது, அல்லது சூப்பர்வைசர் வேலை பார்ப்பது இவ்வாறாக கவனமின்றி, அக்கரையின்றி, அன்பின்றி இருந்து வருவது நாம் நற்கருணை வடிவில் நம்மிடையே வரும் தமதிருத்துவத்திற்கு ( பிதாசுதன்பரிசுத்தஆவிக்கு) செய்யும் அவசங்கையே ஆகும்.

புனித அந்தோணியார் இப்போது அதே சவாலை எதிர்கொண்டால் கழுதைக்குப்பதிலாக ஒரு நாயையோ அல்லது எருமையையோதான் தேடுவார் தப்பித்தவறிகூட மனிதனைத்தேட மாட்டார்.

அதே போல் எதிராளி உஷாராகி எந்த மிருகத்தையும் நீங்கள் போட்டிக்கு பயன்படுத்தக்கூடாது. மனிதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் அந்தோணியார் என்ன பதில் சொல்லுவார் தெறியுமா, “ நான் இந்த விளையாட்டுக்கு வர மாட்டேன் “ என்று சொல்லி விடுவார்.

இது நகைச்சுவையாக தோன்றினாலும் இதயத்தை உருக்கும் உண்மை இதுதான்.

நாம் எப்போது திருந்தபோகிறோம் ? ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம். நாம் தப்பித்தவறி மோட்சம் சென்றால் அங்கு கூட ஆண்டவரை உட்கொள்ளமுடியாது, அந்த பாக்கியம் இங்கு மட்டும்தான் உண்டு; இங்கு மட்டும்தான் உண்டு!

புனித அந்தோனியாரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!