ஆராதனை ஆராதனை இதய வேந்தே ஆராதனை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆராதனை ஆராதனை இதய வேந்தே ஆராதனை

அப்பத்தின் வடிவில் நெஞ்சத்தைத் திறக்கும்

ஆண்டவா உமக்கே ஆராதனை (2)


1. நதிகள் கடலில் கலக்கும் நேரம்

அமைதி பிறக்கும் நேரம் - எங்கள்

இதயம் உறவில் நிலைக்கும் நேரம்

உம்மில் நிலைக்கும் நேரம்

இயேசுவே உம்மை வணங்கும் நேரம்

எம்மனம் இறைமயமாகும் (2)

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்

காதில் ஒலித்திடுமே கருத்தில் நிலைத்திடுமே


2. நீதி உறங்க உண்மை உறங்க

மனிதர் தவிக்கும் நேரம் - மண்ணில்

பகைமை போர்கள் போதை நோய்கள்

இருளை பரப்பும் நேரம்

இயேசுவே தேவனே இறங்கி வாரும்

நன்மைகள் ஓங்கிட வாரும் (2)

வானமுதே வாழ்பவரே

வாழ்வு தாருமையா வலிமை தாருமையா