சமாதானக் கடவுளே போற்றி போற்றி உம் சமாதானக் கொடைகளால் என்னைத் தேற்றும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சமாதானக் கடவுளே போற்றி போற்றி

உம் சமாதானக் கொடைகளால் என்னைத் தேற்றும் -2

சமாதானம் -2 வேண்டும் - 2 இறைவா சமாதானம் (2)


1. எண்ணுவதொன்று நான் செய்வது வேறு

இரண்டுபடும் எனக்குள்ளே சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்

நீதியினை ஆற்ற பிறர் நலனைப் போற்ற

என்னைப்போல பிறரை எண்ணும் சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்

இயற்கையோடும் உம்மோடும் சமாதானம்

வேண்டும் இறைவா எனக்குள் சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்


2. புதுயுகம் காணும் இவ்வழகிய உலகில்

பொய்மையில்லா எளியோர்க்கு சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்

இதயமின்றித் தாக்கும் ஆயுதப் பேயுறவை

இதயத்தாலே வெறுப்போர்க்குச் சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்

பேராசை சுயநலன்கள் மறைய வேணும்

அன்பும் வளமும் பொங்கும் சமாதானம்

சமாதானம் வேண்டும் சமாதானம்