ஒளியூட்டும் இறையாவியே என்றும் வழிகாட்டும் நிறையுண்மையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒளியூட்டும் இறையாவியே - என்றும்

வழிகாட்டும் நிறையுண்மையே

வழியறியா பேதை எந்தன் துயர் நீக்கி துணைபுரிவாய்


1. அருளாகி பொருளாகி உயிர்களுக்குள் உயிராகி

வாழ்வோடு போராடும் நலிந்தவர்க்குத் திடமாகி

இருளகற்றும் ஒளியாய் நீ வா - மனக்

குறை போக்கும் மருந்தாக வா

வற்றாத கார்மழையே காலத்தின் அறிகுறியே

என் வாழ்வின் கருப்பொருளே வா


2. நீர் மீது அசைவாடி வையகத்தைப் புதிதாக்கி

பாவமென்னும் நோய்நீக்கி புதுவாழ்வின் ஊற்றாகி

புதுப்படைப்பாய் எனை மாற்ற வா - எங்கும்

இறையாட்சி நிறைவேற்ற வா

தென்றலிலே பேசிடுவாய் திசை எட்டும் பரவிடுவாய்

என் மூச்சாய் விளங்கிடவே வா