என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே என் மீட்பராம் கடவுளையே நினைந்து மகிழ்கின்றதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே

என் மீட்பராம் கடவுளையே நினைந்து மகிழ்கின்றதே

தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை

கடைக்கண் நோக்கி உயர்த்திவிட்டார்

தலைமுறை யாவும் இனியென்னை

பேறுடையாள் எனப் போற்ற வைத்தார்


1. வல்லமை மிக்கவர் என்றுமே நல்லவர்

அரும் பெரும் செயல் புரிந்தார்

அவருக்கு அஞ்சும் எளியவர் நெஞ்சம் இரக்கத்தை ஊட்டுகிறார்

இதயத்தில் செருக்குற்ற கல்மனத்தோரை விரட்டியே அழித்திடுவார்

அரியணை மீது அமர்ந்திடுவோரை அகற்றிடச் செய்திடுவார் (2)


2. தாழ்நிலை நின்றவர் உயர்வினை அடைவர்

பசித்தோர் நலன் பெறுவார்

செல்வர் தம் செல்வமும் செல்லரித்திடுமே

வெறுமையைக் கண்டிடுவார்

இறைவனின் வாக்கு அழிவது இல்லை சத்தியம் அதுதானே

அடியவர் மீது இறைவனின் இரக்கம் நித்தியம் நிலைதானே (2)