♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம் (2)
மனிதம் மலர்ந்திட புனிதம் வளர்ந்திட
1. நல்வாழ்வின் தீபங்களாய் இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம்வாழ்வின் தேவைகளை தினம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவன் இல்லம் தினம் வந்தால் - நம்
உள்ளங்கள் ஒளியில் நிறைந்திடுமே (2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருள் பெறும் இல்லங்களே (2)
2. இயேசுவோடு நாம் இணைந்தால் என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் இங்கு
உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார் - நம்
வாழ்வினில் என்றும் குடிகொண்டார் (2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருள் பெறும் இல்லங்களே (2)