காணிக்கை தந்தேன் தேவா என்னைக் காணிக்கை தந்தேன் நாதா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தந்தேன் தேவா என்னைக்

காணிக்கை தந்தேன் நாதா (2) எந்தன்

நிலையான சொந்தம் நீதானே என்று

காணிக்கை தந்தேன் தேவா


1. உன்னில்லம் நான் வந்த நேரம் என்றும்

என்னுள்ளம் தூய்மையின் வெண்பனியாகும்

எந்நாளும் எனைத் தரத் தூண்டும்

உந்தன் அருட்கரம் எனை ஏற்க வேண்டும்

கொடையாய் உந்தன் கொடையாய் இன்று

நிறைவாய் எனையும் ஏற்பாய்

வந்தேன் உந்தன் அருகில் அருட்கரத்தினில்

எனை நீ இணைப்பாய்


2. உலகத்தில் நான் கண்ட செல்வம் உந்தன்

பலகோடி நன்மையின் சிறுதுளி வெள்ளம்

உன்னையே பலி தந்த கோலம் நீ

கொடுத்ததால் கண்டேனே இன்பம்

கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன் இன்று

அன்பின் முழுமையாய்க் கொடுத்தேன்

நிறைவாய் உந்தன் அருகில் நான்

நிலைத்திட வரம் எனில் பொழிவாய்