இதோ பெரிய குரு வருகின்றார் வருகின்றார் வருகின்றார் இறைவனுக்குகந்தவர் வருகின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதோ பெரிய குரு வருகின்றார் வருகின்றார் வருகின்றார்

இறைவனுக்குகந்தவர் வருகின்றார் -2

வருகின்றார் வருகின்றார் வருகின்றார்

இறைவனுக்குகந்தவர் வருகின்றார் -2

வருகின்றார் வருகின்றார் வருகின்றார்

1. இவர்கிணையாக இறைசொல்லை

ஏற்று நடப்பவர் வேரில்லை - 2

எனவே அவர் தம் கோத்திரத்தில்

இனிதே செழிப்புற ஆணையிட்டார்


2. எல்லா குலத்து மாந்தர்களின்

ஆசீர் ஆண்டவர் அவர்க்ளித்தார்

எவரின் சிரசின் மேலே தம்

உடன்படிக்கை தனை நிலைக்கச் செய்தார்


3. தம் திருக்கரத்தின் ஆசீரால்

தற்பரன் இவரை ஏற்றுக்கொண்டார்

தன்னவர் முன்னவர் புகழ் விழங்க

மகிமை முடியை அவர்களித்தார்


4. குருத்துவ பணியை நிறைவேற்றி

குவலயம் எங்கும் அவர் பெயரால்

நறுமண பலியை செலுத்திடவே

நல்கினார் பூரண குருத்துவமே