இயேசுவே எல்லாம் நீ எனக்கு என்னுடனே நீயிருக்க எல்லாம் நிறைவெனக்கு என்றும் வாழ்வெனக்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே எல்லாம் நீ எனக்கு என்னுடனே நீயிருக்க

எல்லாம் நிறைவெனக்கு என்றும் வாழ்வெனக்கு (2)


1. உயிரும் நீ உறவும் நீ என் உள்ளத்தின் உணர்வும் நீயே -2

அருளும் நீ திருவும் நீ புவி வாழ்வின் பொருளும் நீ

உயிரும் உறவும் உணர்வும் நீ

அருளும் திருவும் பொருளும் நீயே


2. நினைவும் நீ கனவும் நீ என் நெஞ்சின் நிறைவும் நீயே -2

ஒளியும் நீ விழியும் நீ நான் பார்க்கும் வழியும் நீ

நினைவும் கனவும் நிறைவும் நீ

ஒளியும் வழியும் விழியும் நீயே