இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார்

அன்புக்காக எல்லாம் அன்புக்காக

எல்லாமும் நமக்குத் தர வந்தார்

அன்புக்காக எல்லாம் அன்புக்காக


1. ஆயனில்லா ஆடுகளை பசும் புல்லில் மேயவைப்பார்

அன்புக்காக எல்லாம் அன்புக்காக

ஆற்றோரம் அழைத்துச் சென்று தாகம் தணியவைப்பார்...

வழிதவறிய ஆடுகளைத் தேடி அலைகின்றார்...

இரவில் விழித்து பகலில் நடத்தி அன்பாய்க் காக்கின்றார்

அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 4


2. ஊமைகளைப் பேச வைத்தார் முடவரை நடக்கச் செய்தார்... ...

உளம் நொந்து அழுவோர்க்கு ஆறுதல் தருகின்றார்... ...

சுமைசுமக்கின்ற நம் சுமையைத் தானே சுமக்கின்றார்... ...

உயிரைக்கொடுத்து உலகோர் நம்மை அன்பால் காக்கின்றார்

அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 4