அன்பின் தீபம் ஏற்றவேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பின் தீபம் ஏற்றவேண்டும் அகிலம் ஒளிரவே

அமைதிப் பூக்கள் தூவவேண்டும் மனிதம் மலரவே

உண்மை கீதம் இசைக்கவேண்டும் நீதி செழிக்கவே

இறை உதயம் காணவே

இறைவன் அரசு இதுவன்றோ இனிதே வாழ்ந்திடுவோம் -2


1. உண்மைக்காக உயிரைத் துறந்து

தியாக வாழ்வு நானும் வாழ்ந்து

அன்பின் தூதனாய் பண்பின் வேந்தனாய் - 2

வாழ்வோம் மாண்பினில்

படைப்போம் புதிய வானகம் படைப்போம் புதிய வையகம் - 2


2. பகிர்ந்து வாழ்ந்து பகிர்வில் உயர்ந்து

கருணை மழையில் நாளும் நனைந்து

பொறுமை உணர்விலே உலகை எழுப்புவோம்

பொறுமை உணர்வில் உலகை எழுப்பி மகிழ்வோம் இறைவனில்

படைப்போம் புதிய வானகம் படைப்போம் புதிய வையகம் - 2